முசிறியில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தலைமைக் காவலர் 2 பேர் மீது வழக்கு

முசிறியில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தலைமைக் காவலர் 2 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

திருச்சி: முசிறி அழகபட்டி இந்திரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி சுகிதா (37).

பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட முன்விரோதம் காரணமாக குளித்தலை காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் காந்திசெல்வம் தூண்டுதலின்பேரில், அந்தாரப்பட்டி சாலையிலுள்ள பாரிவள்ளல் நகரைச் சேர்ந்த சுப்பையன், அவரது உறவினரான தாதம்பட்டியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் தன்னை கத்தியால் குத்தி மிரட்டியதாகவும், அதில் தனது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முசிறி காவல் நிலையத்தில் சுகிதா புகார் செய்தார்.

அதன்பேரில் தலைமைக் காவலர் காந்திசெல்வம், சுப்பையன், சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து முசிறி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in