

மதுரை: மதுரையில் ‘இன்ஸ்ட்ரா கிராம்’ மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, 10 பவுன் நகையைப் பறித்த சம்பவத்தில் பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பு பகிர்ந்த தகவல்: மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ்கான். இவர் மதுரையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் இட்ஸ்ராகிராம் மூலம் பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி தகவல் பகிர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியை அவர் வெளியிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியிடம் திருமண செய்துகொள்வதாகவும், வேறு ஊருக்குச் சென்றுவிடலாம் எனவும் யோசனை தெரிவித்து இருக்கிறார். இதை நம்பிய சிறுமி தனது வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து, பயாஸ்கானிடம் கொடுத்துள்ளார். இதன்பின், அவர் தலை மறைவாகிவிட்டார்.
வீட்டில் மாயமான நகையை தேடியபோது, பயாஸ்கானிடம் சிறுமி கொடுத்து இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆய்வாளர் கீதாதேவி விசாரணையில், சிறுமியிடம் இருந்து வாங்கிய நகையை பயாஸ்கான் தனது நண்பர்கள் சதீஸ், சரவணன்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி, சரவணக்குமாரின் தாய் முத்துலட்சுமி ரூ.2.70 லட்சத்திற்கு அடகு வைத்தது கொடுத்துள்ளார் என்றும், இத்தொகையில் சவரணக்குமாருக்கு ரூ.30 ஆயிரமும், சதீசுக்கு ரூ.20 ஆயிரத்தையும் கொடுத்துவிட்டு எஞ்சிய தொகையை பயாஸ்கான் வைத்துகொண்டதும் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்தாக போக்சோ சட்டத்தில் பயாஸ்கான் மீதும், பயாஸ்கானுக்கு உதவியதாக அவரது நண்பர் கள், முத்துலட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அடகு கடை ஒன்றில் இருந்து 10 பவுனை போலீஸார் மீட்டனர்.