Published : 05 Jul 2022 04:20 AM
Last Updated : 05 Jul 2022 04:20 AM

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தருவதாக ராமநாதபுரம் பெண்ணிடம் முறைகேடு - கர்நாடக மாநில இளைஞர் கைது

ராமநாதபுரம்

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட கர்நாடகா மாநில இளை ஞரை ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மனைவி மனோஜா. இவர் வீட்டில் இருந்தபடி இணை யதளம் மூலமாக வேலை செய் வதற்காக வலைதளம் ஒன்றில் பதிவு செய்தபோது மர்ம நபர் ஆன்லைனில் ரூ.25,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் வங்கிக் கணக்கு பெங்களூருவைச் சேர்ந்தது என்பதையும் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், சைபர் கிரைம் ஆய்வாளர் வெற்றிவேல்ராஜன் உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் கண்டறிந்தனர்.

அதனடிப்படையில் கடந்த 3-ம் தேதி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பாச்சனத்தி கிராமத்தைச் சேர்ந்த தர் மகன் மாருதி(23) என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர் தமிழ், கன்னடம் மொழிகள் தெரிந்த டெலிகாலர் பெண்களை வேலைக்கு அமர்த்தி போலியாக நிறுவனம் நடத்தியதும் தெரிய வந்தது. அவர் நடத்திய நிறுவனத்தில் இருந்து ரூ.25,000, இரண்டு லேப்டாப்கள், 7 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாருதியை ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1-ல் ஆஜர்படுத்தி போலீஸார் சிறை யில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x