

மேலூர்: மேலூர் அருகே பணம் மாயமான விவகாரத்தில் 2-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவரை மைத்துனர் கத்தியால் குத்தினார்.
மேலூர் அருகில் உள்ள கற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி(38). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி காத்தம்மாள். இந்நிலையில், செல்வமணி தன்னுடன் சித்தாள் வேலை பார்த்த மீனாட்சியை(30) 2-வது திருமணம் செய்து கொண்டார். 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தினார். இருவருக்கும் தலா இரு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல் போனது. இது தொடர்பாக மீனாட்சி மீது சந்தேகம் எழுந்ததாகத் தெரிகிறது. நேற்று காலை வீட்டில் இருந்த மீனாட்சி திடீரென சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனாட்சியின் குடும்பத்தினர் மற்றும் கொட்டாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாட்சியின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற முயன் றனர். அங்கிருந்த மீனாட்சியின் தம்பி வடிவேல் ஆத்திரத்தில் செல்வமணியின் கழுத்தில் கத்தி யால் குத்தினார். இதை தடுத்த செல்வமணியின் மகன் கவுத முக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸார் வடிவேலைப் பிடித்து விசாரிக்கின்றனர்.