Published : 03 Jun 2022 06:02 AM
Last Updated : 03 Jun 2022 06:02 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 வகுப்பு மாணவர் திருமுருகன் கடந்த 29-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவரது தந்தை கணேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஆரணி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஆரணி பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தரமற்ற சுமார் 10 கிலோ இறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளனர். இந்த நடவடிக்கை என்பது கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “ஆரணியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந் தார். இதையடுத்து, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் என்பது, உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சியின் சுகாதார பிரிவின் அலட்சியம். ஒவ்வொரு உயிரிழப்புக்கு பிறகுதான், அவர் களது நடவடிக்கை உள்ளது. அவர்கள் சுழற்சி முறையில், அசைவ உணவகங்களில் அடுத் தடுத்து ஆய்வு செய்திருந்தால், தரமற்ற உணவு மற்றும் சுகா தாரமற்ற உணவு விற்பனை செய்யப்பட்டிருக்காது.
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப் பிட்டவர் உயிரிழந்ததும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதற்கிடையில், மாணவர் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும் அசைவ உணவகத்துக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆரணி நகராட்சி நிர்வாகத்துக்கு காவல்துறை நேற்று பரிந்துரை செய்துள்ளது.
காவல்துறையின் பரிந்துரை கடிதத்தில், “ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள அசைவ உணவகத்தை அன்வர்பாஷா நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் கடந்த மே மாதம் 24-ம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவர் திருமுருகன் கடந்த 29-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
இது குறித்து அவரது தந்தை கணேஷ் புகார் கொடுத்துள்ளார். மேலும், அசைவ உணவகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதனால் அமைதி சீர்குலைந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விசா ரணை முடியும் வரை, அசைவ உணவகத்துக்கு ‘சீல்’ வைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT