

ஆற்காடு: ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியைச் சேர்ந்தவர் ராமன்(58). இவரது மனைவி மேரி (52). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிப்காட் பகுதியில் வசித்து வரும் தனது மகள் அஸ்வினி பிரியாவை (33) பார்க்க ராமனும், மேரியும் இரு சக்கர வாகனத்தில் ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை அருகே வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மேரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் மேரி புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.