Published : 27 Apr 2022 08:06 AM
Last Updated : 27 Apr 2022 08:06 AM

நெல்லையில் லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் மனைவி, மகனுடன் காவல் உதவி ஆய்வாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சசிகுமார் (42). மினி லாரி ஓட்டுநராக இருந்தார். கடந்த 17-ம் தேதி இரவில் மார்க்கெட்டில் மினி லாரியில் இருந்து காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் மயங்கி விழுந்த சசிகுமார் திருநெல்வேலி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தச்சநல்லூர் போலீஸார் விசாரித்தனர்.

சுப்பையாபுரத்தில் அழகுபாண்டியன் என்பவரின் இடத்தில்இருந்த தென்னங்கன்று மற்றும்கார் ஷெட்டை சேதப்படுத்தியதற்காக சசிகுமார் மீது மானூர்காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முன்விரோதத்தில் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, அழகுபாண்டியன்(57), அவரது மனைவி ராஜம்மாள்(52), மகன் பாலமுருகன் (29), திம்மராஜபுரம் சிதம்பரகுமார் (39), அவரது மனைவி அனிதா(36), தாழையூத்து சங்கரநாராயணன்(24) ஆகியோர் கைதாகினர்.இவர்களில் அழகுபாண்டியன் திருநெல்வேலி மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார். கொலைவழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சசிகுமாரின் உடலை வாங்க மறுத்து அவரதுஉறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி சசிகுமாரின் பிள்ளைகளின் படிப்புச்செலவை ஏற்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவாக உறுதியளித்தார். இதையடுத்து, சசிகுமாரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x