

சென்னை: சென்னையில் 13 வயது சிறுமிகயை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தாய் மாமன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை, சிறுமி பிறந்த உடனே இறந்துள்ளார்.
இதையடுத்து, அவரது தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், குழந்தை இல்லாத அவரது தாய்மாமன் பராமரிப்பில் அச்சிறுமி இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு தாய் மாமன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தாய்மாமனின் நண்பர்கள் 3 பேரும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையறிந்தும், சிறுமியின் அத்தை இதை தட்டிக் கேட்காமல், சிறுமியை சித்தரவதை செய்துள்ளார். மேலும், சிறுமியின் தாயும் மகளை மீட்கவோ, குற்றம் செய்தவர்களை தட்டிக் கேட்கவோ இல்லை. ஏழு ஆண்டுகளாக சித்தரவதையை அனுபவித்த சிறுமி, பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பாரிமுனையில் சுற்றித் திரிந்துள்ளார்.
சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறுமியின் தாயும் மகளை மீட்கவோ, குற்றம் செய்தவர்களை தட்டிக்கேட்கவோ இல்லை.