

கம்பம் கேகே.பட்டி சாலையைச் சேர்ந்தவர் சதீஸ்(30). கூலித் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதில் கர்ப்பமான சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு 4 மாத சிசு வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து இது குறித்து குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஸ் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.