

மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள மணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த அறிவியல் ஆசிரியர் பாரதி (40). இவர் 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடமெடுத்துள்ளார்.
மாணவிகள் சிலருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெள்ளச்சாமி புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமாராணி விசாரித்தார். மாணவிகளும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.