17 வயது சிறுமியை கடத்தி திருமணம்: கோவில்பட்டியில் இளைஞர் கைது

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்: கோவில்பட்டியில் இளைஞர் கைது
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த ரவி மகன் ராமர் (20). இவர் கடந்த 1-ம் தேதி கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். ராமர் கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in