

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புகையிலை (குட்கா) பொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று அதிகாலை பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் முகமது எர்சாத் தலைமை யில் தனிப்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை யிட்டபோது அதில் 1,274 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் 54 மூட்டைகளில் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம். பின்னர் லாரியையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டம்பள்ளியைச் சேர்ந்த முனியசாமி மகன் மகேஷ்குமார்(39), பரமக்குடியைச் சேர்ந்த ராமஜெயம்(59) ஆகியோரைக் கைது செய்தனர்.