முதுகுளத்தூர் அருகே கடன் தொல்லையால் வீடியோ பதிவு செய்த பின் விவசாயி தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கடன் தொல்லையால் வீடியோ பதிவு செய்த பின் விவசாயி தற்கொலை
Updated on
1 min read

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கடன் பிரச்சினை யால் விவசாயி வீடியோ பதிவு செய்து வெளியிட்ட பின்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(58). விவசாயி.இவர் அதே பகுதியைச் சேர்ந்த கூட்டுறவு கடன் சங்கக் காசாளரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் பிரச்சினையால் சிரமப்பட்ட தங்கவேல் நேற்று காலை வயலுக்குச் சென்றார். தனது கடன் பிரச்சினை குறித்தும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மொபைல் போனில் வீடியோ எடுத்து, அதை கிராம உதவியாளர் (தலையாரி) உள்ளிட்ட சிலருக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது வீடியோவை பார்த்தவர்கள் உடனடியாக வயலுக்குச் சென்று, அவரை மீட்டு மேலச்சிறுபோது சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே தங்கவேல் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இளஞ்செம்பூர் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in