

திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமையாசிரியர் கேரளாவில் பதுங்கி இருந்த போது கைது செய்யப் பட்டார்.
திசையன்விளை வடக்கு பஜாரிலுள்ள சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில், நாங்குநேரி ஏமன்குளம் பிரதான சாலையை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (50) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார்.
இப்பள்ளி மாணவி களுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோர் களிடம் இது குறித்து தெரிவித் துள்ளார். இதையடுத்து திசையன்விளை போலீ ஸில் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கிறிஸ் டோபர் ஜெபக்குமார் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையறிந்த அவர் தலைமறைவானார். பாலியல் புகாரை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனிடையே தலைமறைவான தலைமையாசிரியரை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டனர். அவர் கேரளாவுக்கு சென்று பதுங்கி இருந்தது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அங்கு சென்று கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை திசையன்விளைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.