திண்டுக்கல் மருத்துவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

திண்டுக்கல் மருத்துவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
Updated on
1 min read

சென்னையிலுள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பி பிஎஸ் சீட் பெற்று தருவதாக, திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் மருத்துவர் சிவசுப்பிரமணியன். மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சிவசுப்பிரமணி யனை சந்தித்தார். அப்போது, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் சிவசுப் பிரமணியனின் மகளுக்கு எம்பி பிஎஸ் ‘ சீட் ’ பெற்றுத் தருவதாக கூறினார். இதை நம்பி 2 கட்டமாக ரூ. 2.84 லட்சத்தை மருத்துவர் கொடுத்துள்ளார். ஆனால், பேசியபடி மருத்துவ சீட் பெற்று தரவில்லை.

இதுகுறித்து மருத்துவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், பாலாஜி மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in