ஈரோடு: சிறுமியைக் கடத்தி திருமணம் கட்டிடத் தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு: சிறுமியைக் கடத்தி திருமணம் கட்டிடத் தொழிலாளி போக்சோவில் கைது
Updated on
1 min read

ஈரோடு: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளியை, போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காகம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (28). கட்டிடத் தொழிலாளி . ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகிய இவர், அவரைக் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தைத் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாமோதரனைக் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in