

கோப்புப் படம்
கோவை: கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருடப்பட்ட விவகாரத்தில் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இக்கோயிலில் கடந்த 15-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் சிலர் யாரும் கவனிக்காத சமயத்தில் ஒரு உண்டியலை தனியாக எடுத்து வைத்தனர். பின்னர், அன்றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்கைகளை ஒரு பையில் எடுத்துச்சென்றனர்.இதுகுறித்த புகாரின்பேரில் கோயில் பூசாரி கிருஷ்ணராஜ், ஊழியர்கள் பாலசுப்பிரமணியம், சரவணன், பிரதீப்குமார் ஆகியோரை உக்கடம் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் இந்த திருட்டை கண்டுபிடிக்காமல் இருந்ததாக சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார், செயல் அலுவலர் குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார். மேலும், உதவி ஆணையர் உஷா நந்தினிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.