போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 621 பேர் கைது

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 621 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் கடந்த 3 நாட்​களாக போதைப் பொருட்​களுக்கு எதி​ராக எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​யில், 621 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

போதைப் பொருட்​கள் மற்​றும் தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​களின் விற்​பனையை முற்​றி​லும் ஒழிக்​கும் வகை​யில், தமிழக காவல்​துறை பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, கடந்த 3 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழு​வதும் சிறப்பு சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக மாவட்ட மற்​றும் மாநகர காவல்​துறை​யினர் முக்​கிய சாலைகள், எல்​லைப் பகு​தி​கள், பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள் மற்​றும் சந்​தேகத்​திற்​கிட​மான இடங்​களில் தீவிர வாகன சோதனை, கண்​காணிப்பு மற்​றும் நுண்​ணறிவு தகவல்​களின் அடிப்​படை​யில் ஒருங்​கிணைந்த நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர்.

இந்த 3 நாள் நடவடிக்​கை​யில், போதைப் பொருள் மற்​றும் தடை செய்​யப்​பட்ட புகை​யிலை பொருட்​கள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ், 617 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதில், 296 கிலோ கஞ்​சா, 1.3 கிலோ பிறபோதைப்​பொருட்​கள், 802 போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இந்த வழக்​கு​களில் தொடர்​புடைய 621 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அதே​போல், தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​கள் கடத்​தல் மற்​றும் விற்​பனை தொடர்​பாக 650 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

இதில், 6,653 கிலோ தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. மேலும், போதைப்​பொருட்​கள் மற்​றும் புகை​யிலைப் பொருட்​கள் கடத்​தல், பதுக்​கல் அல்​லது விற்​பனை தொடர்​பான தகவல்​கள் தெரிந்​தால், போதைப் பொருள் இல்​லாத தமிழ்​நாடு (Drug Free TN) செயலி, கட்​ட​ணமில்லா உதவி எண் ‘10581’ அல்​லது 94984 10581 என்ற வாட்​ஸ்-​அப் எண்​ணின் மூலம் ​மக்​கள் தகவல் தெரிவிக்​கலாம் என்​று, டிஜிபி மகேஷ் குமார்​ அகர்​வால்​ தெரி​வித்​துள்​ளார்​.

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 621 பேர் கைது
போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in