மதுரையில் லஞ்ச வழக்கில் சிறை தண்டனை பெற்ற காவல் ஆய்வாளர் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை

மதுரையில் லஞ்ச வழக்கில் சிறை தண்டனை பெற்ற காவல் ஆய்வாளர் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை
Updated on
2 min read

லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுரை செல்லூர் கீழவைத்தியநாதபுரம் நேரு தெருவில் வசித்தவர் பெருமாள்பாண்டியன்(50). இவர் மதுரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.

இவரது மனைவி உமா மீனாள் (47). இவர்களுக்கு கல்லூரி படிப்பு முடித்த சுந்தர் சுகிர்தன் (22), 9-ம் வகுப்பு பயிலும் பிரணவ் கவுதம் (14) ஆகிய மகன்கள் உள்ளனர். பெருமாள்பாண்டியன் சொந்த ஊர் தேனி மாவட்டம் வடுகபட்டி.

இதற்கிடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த ஒருவரின் புகாருக்கு சாதகமாக செயல்பட நமச்சிவாயம் என்பவர் மூலம் 2010-ல் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங் கியதாக பெருமாள்பாண்டியன் கைது செய்யப்பட் டார். அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார். அவருக்கு எதிரான வழக்கில்

டிச.,14-ல் மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தது. அவருக்கு லஞ்சம் கொடுத்த நமச்சிவாயத்துக்கும் 2 மாதம் சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், ஜாமினில் பெற்று தன் மீதான சிறை தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் பெருமாள்பாண்டியின் இளைய மகன் அவரது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த மூத்த மகன் சுந்தர் சுகிர்தன் நேற்று காலை 10 மணிக்கு கம்ப் யூட்டர் வகுப்புக்கு சென்றார். மதியம் 1 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. பெற்றோர் போனுக்கு அழைத்தும் எடுக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, தாய் உமா மீனாள் வீட்டுக்குள் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அதே அறையில் பெருமாள்பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு கதறி அழுதார். அக்கம், பக்கத்தினரும் திரண்ட னர்.

இது குறித்து தகவல் அறிந்த செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைசாமி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் . உமா மீனாள் தலை யில் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அருகில் கத்தி ஒன்றும் கிடந்தது. இரு வரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், பெருமாள்பாண்டியன் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 10 ஆண்டாக சஸ்பெண்ட் ஆன, நிலையில், அவருக்கு எதிரான லஞ்ச வழக்கில் சிறை தண்டனை கிடைத்த தால் மேலும், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர் பாக செல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in