

மதுரை அருகே தனியார் பஸ் மோதி ஆட்டோவில் பயணித்த இருவர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகிலுள்ள பூச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (62), புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமதி (52). இருவரும் இன்று சுமார் மாலை 6.30 மணிக்கு நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் இருந்து ஆட்டோவில் ஊருக்குச் சென்றனர்.
செக்கானூரணிக்கு முன்பாக ஊத்துப்பட்டி பிரிவில் எதிர்பாராதவிதமாக மதுரை- தேனி நோக்கிச் சென்ற வேல்முருகன் என்ற தனியார் பேருந்து, ஆட்டோ மீது மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த சுமதி, பாண்டி சம்பவ இடத்தில் மரணம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது தொடர்பாக விசாரிக்கின்றனர்.