பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் உள்ள கங்​காவதி நகர பாஜக‌ இளைஞர் அணி தலை​வர் வெங்​கடேஷ் குருபரா (35). இவர் கடந்த ஆண்டு அக்​டோபரில் கங்​காவதி அருகே 6 பேர் கொண்ட கும்​பலால் கொலை செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்த கங்​காவதி போலீ​ஸார், சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் ரியல் எஸ்​டேட் தொழிலில் ஈடு​பட்டு வந்த ரவி (29), மைலாரி (32) உள்​ளிட்ட 6 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் 6 பேருக்கு எதி​ராக 925 பக்க குற்​றப்​பத்​திரி​கையை கொப்​பல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு தாக்​கல் செய்​தனர்.

வழக்கை விசா​ரித்து வந்த நீதிபதி சாதனந்த நாகப்பா நேற்று தீர்ப்பளித்​தார். அதில், ‘‘வெங்​கடேஷ் குருபரா மீதான முன்​பகை காரண​மாக ரவி (29), மைலாரி (32), தன்​ராஜ் (28), பஷீர் (26), சலீம் (30), கங்​காதரா (32) ஆகிய 6 பேரும் திட்​ட​மிட்டு கொலை செய்ததை அரசு தரப்​பில் தக்க ஆதா​ரங்​களு​டன் நிரூபித்துள்ளனர். எனவே, 6 பேருக்​கும் தூக்கு தண்டனை​யும், தலா ரூ.3 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. அபராத தொகையை வெங்கடேஷ் குருப​ரா​வின் குடும்​பத்​தினருக்கு வழங்க வேண்​டும்​’’ என்​று உத்​தர​விட்​டார்​.

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு
ஈரான் மீது தாக்குதலுக்கான நாடாளுமன்ற அனுமதி பெறும் 60 நாள் காலக்கெடு தற்காலிக நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in