சென்னை: மின்சாரம் திருடியவருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

சென்னை: மின்சாரம் திருடியவருக்கு ரூ.6 லட்சம் அபராதம்
Updated on: 
1 min read

சென்னை: அடை​யாறு பகுதி​யில் மின் திருட்​டில் ஈடு​பட்ட நுகர்​வோருக்கு ரூ.5.98 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக மின்​வாரியம் தெரி​வித்​துள்​ளது.

இது​குறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த மாதம் 29-ம் தேதி மின்​வாரியத்​தின் சென்னை அமலாக்க கோட்​டத்​துக்கு உட்​பட்ட அதி​காரி​கள், அடை​யாறு மின் பகிர்​மான வட்​டத்​துக்கு உட்​பட்ட பகுதி​யில் கூட்டு ஆய்வு மேற்​கொண்​டனர்.

அப்​போது ஒரு உயர் மதிப்​புள்ள மின் திருட்டு கண்​டு​பி​டிக்​கப்​பட்டு இழப்​பீட்டு தொகை​யாக ரூ.5 லட்​சத்து 98,004 மின் நுகர்​வோருக்கு அபராத​மாக விதிக்​கப்​பட்​டது.

மேலும், சம்​பந்​தப்​பட்ட மின் நுகர்​வோர்​கள் குற்​றத்தை ஒப்​புக்​கொண்டு குற்​றவியல் நட​வடிக்​கையைத் தவிர்க்க முன்​வந்து அதற்​குரிய சமரசத் தொகை​யாக ரூ.32 ஆயிரம் செலுத்​தி​ய​தால், அவர்​கள் மீது காவல் நிலை​யத்​தில் புகார் ஏதும் பதிவு செய்​யப்​பட​வில்லை. இவ்​வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

X