

மதுரையில் தனது இரு பெண் குழந்தைகளையும் எரித்துக் கொன்ற தாய் தானும் தீக்குளித்து தற்கொலை செய்தார். இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(35). மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி (32). இவர்களுக்கு வரிஜாஸ்ரீ (4), வர்னிகா(2) என இரு பெண் குழந்தைகள் இருந்தன.
கணவன், மனைவிக்குள் ஏற்கெனவே குடும்பப் பிரச்னை இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தமிழ்செல்வி வீட்டில் அலறல் கேட்டு அக்கம், பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மண்ணெண்ணை குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற தமிழ்செல்வியும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.
தமிழ்ச்செல்வியை மட்டுமே மீட்க முடிந்தநிலையில், அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக திடீர்நகர் காவல் ஆய்வாளர் லட்சுமி, பாண்டியை கைது செய்தார்.