பேஸ்புக்கில்  பழகி பெண் குழந்தைகள் மீது அவதூறு: பணம் கேட்டு மிரட்டிய ஈரோடு நபரைத் தேடும் மதுரை போலீஸார்  

பேஸ்புக்கில்  பழகி பெண் குழந்தைகள் மீது அவதூறு: பணம் கேட்டு மிரட்டிய ஈரோடு நபரைத் தேடும் மதுரை போலீஸார்  
Updated on
1 min read

பேஸ்புக்கில் நண்பராகி, தனியார் நிறுவன ஊழியரின் இரு பெண் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய ஈரோட்டைச் சேர்ந்தவரை மதுரை போலீஸார் தேடுகின்றனர்.

மதுரை விரகனூரைச் சேர்ந்தவர் கணேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 13 மற்றும் 11 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரோனா ஊரடஙகின்போது, வீட்டில் இருந்த கார்த்திகேயனுக்கும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வா என்ற மதுரை செல்வா (43) என்பவருக்கும் இடையே பேக்ஸ்-புக் மூலம் அறிமுகமாகி நண்பர்களாகினர். தொடர்ந்து இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக, அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், செல்வா மீது ஒத்தக்கடை வழக்குப்ப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக செல்வா மதுரைக்கு வந்தபோது, கார்த்திகேயனை நேரில் பார்த்து இருவரும் பழகிவந்தனர். கடந்த 31-ம் தேதி வழக்கு தொடர்பாக அவர் மதுரைக்கு வந்த நிலையில் ஒத்தக்கடை வழக்கில் ஜாமீன் எடுக்க, ரூ. 50 ஆயிரம் மற்றும் இரு ஜாமீன்தாரர்கள் ஏற்பாடு செய்துகொடுக்குமாறு கார்த்திகேயனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் மறுத்தபோது, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் கார்த்திகேயன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த தனது குடும்பத்தினரின் குழு புகைப்படத்தில் அவரது இரு பெண் குழந்தைகளின் படங்களை மார்பிங் செய்து, அவதூறு செய்துள்ளார்.

மேலும், கார்த்திகேயனைத் தவறாக சித்தரித்து, அவருக்கு எதிரான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். இவற்றை கார்த்திகேயன் தட்டிக்கேட்டு, சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

ரூ. 1 லட்சம் கொடுத்தால் மட்டுமே நீக்குவேன் என, அவரைத் தொடர்ந்து மிரட்டி வந்தபோதிலும், வேறு வழியின்றி கார்த்திகேயன் மதுரை மாவட்ட எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மதுரை செல்வா மீது சிலைமான் காவல் உதவி ஆய்வாளர் ராஜூ வழக்கு பதிவு செய்து, அவரை தேடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in