வேலை வாங்கித்தருவதாக ரூ.37.85 லட்சம் மோசடி: மதுரை காவல்துறை அலுவலக அதிகாரி மீது புகார்

வேலை வாங்கித்தருவதாக ரூ.37.85 லட்சம் மோசடி: மதுரை காவல்துறை அலுவலக அதிகாரி மீது புகார்
Updated on
1 min read

மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி காளிதாஸ். இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: எனது குடும்ப நண்பரான திருநகரைச் சேர்ந்த சரோஜா என்பவரை அணுகினேன். அவர் தனது மகனுக்கு புட் கார்ப்பரேசனில் வேலை வாங்கியதாகக் கூறினார். மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரியும் மேலபொன்னகரம் சக்திவேல்பாண்டியராஜ், மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அவரது மனைவி மூலமே தனது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்களை அணுகினால் தனக்கும், மனைவிக்கு வேலை வாங்கிடலாம் என, ஆசை வார்த்தைகளைக் கூறினார். இதை நம்பி 2019 மே மாதம் 21ம் தேதி சக்திவேல்பாண்டிராஜை ஆரப்பாளையத்தில் அவரது அலுவலகத்தில் சந்திதோம்.

சென்னை தலை மைச் செயலகத்தில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததாக சில ஆர்டர் நகல்களை காண்பித்தார். பின்னர் தகவல் சொல்கிறோம் என, கூறிவிட்டு வந்துவிட்டோம்.

இதற்கிடையில் சரோஜா எனது அத்தை மகன் முரளி என்பவரி டம் கூறியதன்பேரில், மீண்டும் பாண்டியராஜை சந்தித்தபோது, 3 நாட்களில் பணம் கட்டினால் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். சரோஜா வீட்டில் வைத்து, 2019 ஜூனில் பாண்டிய ராஜிடம் ரூ.3 லட்சம் கொடுத்தோம். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. 2 மாதம் கழித்து எங்களை அழைத்த பாண்டியராஜ், உங்களுக்கு வரிசை எண், பணியிடம் குறித்த தகவல் வந்துள்ளது. விரைவில் பணியில் சேரலாம் எனத் தெரிவித்தார். ஆனாலும் கரோனாவை காரணம் காட்டி எங்களுக்கு அவர் வேலை வாங்கித்தரவில்லை.

விசாரித்தபோது, மேலும், பலரிடம் பல் வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றியது தெரிந்தது. அவரது அலுவலகமும் மூடப்பட்டது.

பணத்தை திருப்பி கேட்டபோது, தேவராஜ் என்ப வரிடம் கொடுத்தாகவும், அவரிடமிருந்து வாங்கித் தருவதாகவும் கூறினார். ஆனாலும் தரவில்லை. ஆசை வார்த்தைகளைக் கூறி ரூ.37. 85 லட்சத்துக்கு மேல் பலரிடம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிகிறது. அவர் உட்பட அவருக்கு உடந்தையான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரவேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in