தூத்துக்குடியில் காதல் திருமணத்தை எதிர்த்து இரட்டைக் கொலை: புதுமாப்பிள்ளை படுகாயம்

தூத்துக்குடியில் காதல் திருமணத்தை எதிர்த்து இரட்டைக் கொலை: புதுமாப்பிள்ளை படுகாயம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தனது சகோதரியின் காதல் திருமணத்தை ஏற்க இயலாத இளைஞர் புதுமாப்பிள்ளையும், அவரது சகோதரர் பெற்றோரையும் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். புதுமாப்பிள்ளையும் அவரது தந்தையும் கவலைக்கிடமாக உள்ளனர்.

தூத்துக்குடி அருகே சிவகளை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் சங்கீதாவை காதல் திருமணம் செய்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனிடையே கணவன் மனைவி மற்றும் குடும்பங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு.

இந்நிலையில், சகோதரி காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்க இயலாத பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் விக்னேஷ் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது.

விக்னேஷ் ராஜாவை பார்க்க விரும்புவதாக வரச்சொல்லியுள்ளார். அங்கு தனது நண்பருடன் அவர் சென்ற நிலையில் விக்னேஷ் ராஜாவையும் அவரது நண்பரையும் பெண்ணின் சகோதரரும் அவரது கூட்டாளிகளும் சரமாரியாக வெட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விக்னேஷ்ராஜா படுகாயமடைந்தார். அவரது நண்பர் அருண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், அந்த கும்பல் விக்னேஷ் ராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரது தாய் முத்துப்பேச்சி, தந்தை லட்சுமணன் ஆகியோரையும் தாக்கியுள்ளது. இதில் முத்துப்பேச்சி உயிரிழந்தார். லக்‌ஷ்மணன் தூத்துக்குடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புதுமாப்பிள்ளை விக்னேஷ் ராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in