

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதுரை உட்பட பல் வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை ‘டிக்டாக்’ மூலம் ஆசைவார்த்தை கூறி பணம் பறித்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.
அந்தப் பெண்ணை பிடிக்க, மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார் மேற்பார்வையில், உதவி ஆணையர் ஜெயக்குமார், காவல் ஆய்வாளர் இளவரசு அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் திருப்பூர் பகுதியில் முகாமிட்டு அவரது மொபைல் போனை தொடர்ந்து கண்காணித்தனர். திருப்பூர் ஆலங்காடு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, நேற்று அந்தப் பெண்ணை பிடித்தனர்.
விசாரணையில், அவர் தனது முகநூலில் இளைஞர்களிடம் பல்வேறு ஆசைவார்த்தை கூறி, நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறித்ததும், இதில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் தெரிந் தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த மதுரை போலீஸார், அவரி டம் விலையுர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.