

நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கடத்துதல், பதுக்குதல் மற்றும் ரேசன் பொருட்களை எடை குறைவாக வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்புக்கான ஊரடங்கையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பேரில், நியாயவிலைக் கடைகளில் இலவசமாக பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேசன் அரிசியை கடத்துதல், பதுக்குதல் மற்றும் ரேசன் பொருட்களை எடை குறைவாக வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மண்டல குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற முறைகேடு செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும்.
மேலும், முறைகேடு குறித்து, மதுரை மண்டல குடிமைப் பொருள் காவல் கண்காணிப்பாளர் (94981-04441), காவல் துணை கண்காணிப்பாளர் (94981-04527), காவல் ஆய்வாளர் (94981-90123), உதவி ஆய்வாளர் (94981-79520) ஆகியோரின் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மதுரை மண்டல குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.