மதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள்  சேதம்

மதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள்  சேதம்
Updated on
1 min read

மதுரை அண்ணாநகர் பகுதியில் மருந்து மற்றும் குளிர்பான குடோனில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவலிங்க சம்ப பிரகாஷ் என்பவர் குளிர்பானம், அமிர்தாஞ்சன் மருந்து பொருட்களுக்கான 2 மாடி குடோன் நடத்துகிறார்.

ஊரடங்கு உத்தரவால் ஒரு வாரத்திற்கு மேலாக குடோன் பூட்டிவைக்கப்பட்டிருப்பது.

இன்று காலை குடோன் தரைதளத்திலிருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் உள்ளே தீ பற்றி எரிவதும் தெரிந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அட்டை பெட்டிகளில் மருந்து, குளிர்பான பொருட்கள் இருந்ததாலும், அமிர்தாஞ்சன் பாக்ஸ்கள் சூடாகி உருகி தீ பிடித்ததாலும் கரும்புகை வெளியேறியது.

மூச்சுதிறணலில் இருந்து தப்பிக்க, அக்கம்-பக்கத்தினர் அப்புறப்படுத்தப்பட்டனர். குடோன் கதவுகளை திறந்து புகையை வெளியேற்றியபின், சுவரில் துளையிட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வீரர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் தீயை அணைத்தனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண சுந்தரம் தலைமையில் நிலைய அலுவலர்கள் சிவக்குமார், உதய குமார், வெங்கடேசன் மற்றும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

7 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்தத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலம் என சந்தேகிக்கின்றனர். லட்சக்கணக்கிலான மருந்து பொருட்கள் சேதமடைந்து இருக்கலாம் என, அண்ணாநகர் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in