மதுரையில் தொடரும் போக்குவரத்து விதிமீறல்: அதிகரிக்கும் ஓட்டுநர் உரிம ரத்து நடவடிக்கை

மதுரையில் தொடரும் போக்குவரத்து விதிமீறல்: அதிகரிக்கும் ஓட்டுநர் உரிம ரத்து நடவடிக்கை
Updated on
1 min read

மதுரையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஓட்டுநர் உரிம ரத்து நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மதுரை நகரில் நாளுக்கு, நாள் வாகனப் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது. போதிய சாலை வசதி இல்லை என்றாலும், புதிய வாகனங்கள் வாங்குவோரின் ஆர்வம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது.

இரு சக்கரம், நான்கு சக்கரம், பிற வாகனம் என, நகரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. ஒ

ஒவ்வொரு சிக்னலையும் கடக்க, மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதனால், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க, போலீஸாரின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம், தலைக்கவசம் போன்ற போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் காகிதமின்றி இ- சலான் மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

மதுபோதையில் வாகனங்கள் இயக்குவோருக்கு மட்டுமே இ- சலானில் அபராதத் தொகை குறிப்பிடாமல் ரசீது வழங்கப்படும். அவர்கள் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்துகின்றனர்.

மதுரை நகரில் விபத்துக்களை குறைக்கும் வகையில்,போதையில் வாகனங்கள் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், அளவுக்கு மீறி லோடு ஏற்றுதல் உள்ளிட்ட சில போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஓட்டுநர் உரிமங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக ரத்து செய்வதற்கு போலீஸார் பரிந்துரைப்பது அதிகரித்துள்ளது.

வாகனச் சோதனைகளும் தொடர்ந்து நகரில் கூடியுள்ளது. 2020 ஜனவரி, பிப்ரவரியில் மட்டும் நகரில் 1000-க்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்வதற்கு பரித்துரைக்கப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் கூறியது:

கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராத தொகை வசூலிக்க, இ- சலான் இயந்தரம் அறிமுகப்பட்டது.

மதுரை நகரில் 14 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸாரிடமும் இந்த இயந் திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே விதிமீறல் தொடர்பான அபராத தொகை ஏடிஎம், கிரேடி கார்கள் வாயிலாக வசூலிக்கிறோம்.

கார்டு வசதி இல்லாதவர்களுக்கு ஆன்லைன் ரசீது வழங்கப்படுகிறது. இ – சேவை மையங்கள், எஸ்பிஐ வங்கி யில் அபராத தொகையை செலுத்தலாம்.

குறிப்பிட்ட நாள் அவகாசம் கொடுப்பதால் பலர் அபராத தொகை செலுத்துவதில்லை. இச் சூழலில் ஹெல்மெட் அணிவதும் குறைவது தெரிகிறது. எனவே, அபராதத் தொகையைத் துரிதமாக வசூலிக்கவும், ஆன்லைனில் சம்பந்தப்பட்டவரின் பிற பரிவர்த்தனைக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உட்பட குறிப்பிட்ட சில குற்றச்செயல் புரிவோரின் ஓட்டுநர் உரிமம் 3 மாததிற்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டுமே 1200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

இவர்களின் அசல் உரிமம் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து அதிகரிக்கும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in