

மதுரையில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (32). இவர் செல்லூர் பகுதியில் உள்ள போஸ் தெருவில் எஸ்ஏவிஎம் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்துகிறார்.
இவரது கடைக்கு கடந்த 27-ம்தேதி சுமார் 10 வயதுச் சிறுமி ஒருவர் மருந்து, மாத்திரை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சங்கர் கணேஷ் அந்தச் சிறுமியிடம் தவறான நோக்கத்தில் அணுகி, அவரைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் ஆய்வாளர் புவனேசுவரி, மருந்துக் கடைக்காரர் சங்கர் கணேஷ ‘போக்சோ ’ சட்டத்தில் கைது செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் கணேஷ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.