

சேலம் அருகே ரூ.20 ஆயிரத்துக்கு பெண் குழந்தையை பெற்றோர் விற்பனை செய்தனர். தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் குழந்தையை மீட்டனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி சேத்துப்பாதை பகுதியைச் சேர்ந்த வர் சின்னதம்பி. கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான உமாவுக்கு, காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் சில தினங்க ளுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கெனவே 2 பெண் குழந்தை கள் உள்ள நிலையில், புதிதாக பிறந்த பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு சின்னதம்பி விற் பனை செய்துவிட்டதாக தீவட்டிப் பட்டி வி.ஏ.ஓ.வுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து சேத்துப்பாதைக்குச் சென்று வருவாய்த் துறையினர் சின்னதம்பியிடம் விசாரித்தனர்.
இதில், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி (வேறொருவர்) - ஜமுனா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லா ததை அறிந்த சின்னதம்பி - உமா தம்பதி, தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை அவர்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அதிகாரி கள் குழந்தையை மீட்டு சின்ன தம்பி-உமா தம்பதியிடம் ஒப்படைத் தனர். மேலும், சின்னதம்பி-உமா தம்பதி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியை யும் எச்சரித்து அனுப்பினர்.