என்.சன்னாசி

Published : 22 Aug 2019 11:39 am

Updated : : 22 Aug 2019 12:52 pm

 

மதுரையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை: முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

murder-in-madurai

மதுரை,

மதுரையில் நேற்றிரவு (புதன் இரவு) திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் முன்விரோதம் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்தவர் ராஜா (33). இவர் நேற்றிரவு 11 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் 2-வது சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராஜாவின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிஜாமுதீன், குட்டி கார்த்திக், டுபீக், ஹரி கிருஷ்ணா என்ற 4 பேரைப் பிடித்து புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2012-ல் புதூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபரை வெட்டிக் கொன்ற சம்பவத்திற்கு பழிவாங்கவே ராஜா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


முதற்கட்ட விசாரணையில் இது பழிவாங்கல் கொலை எனக் கூறப்பட்டாலும் போலீஸார் தொடர்ந்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரைதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலைபோலீஸ் விசாரணை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author