

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மு-6 டி.பிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (11.8.2019) இரவு அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டி.பி.சத்திரம், நான்கு அடுக்கு குடியிருப்பு, எண்.34 என்ற முகவரியில் உள்ள வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் 1.ஜெயந்தி, 2.ரஞ்சித், 3.சுரேஷ்பாபு, 4..பாஸ்கர், 5.சுதாகர், 6.ரமேஷ், 7.அஜித், 8. எம்.எஸ்.நகர், 9.புருஷோத்தமன், ஆகியோரைக் கைது செய்தனர். மேற்படி நபர்களிடமிருந்து பணம் ரூ47,290/-, 7 செல்போன்கள் மற்றும் சீட்டுக்கட்டுகள்- 2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.