தாம்பரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேர் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தாம்பரத்தில் ரவுடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் சின்ன அப்புனு (எ) பிரதீப்குமார் (30), கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29). இருவர் மீதும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் காக்கா முட்டை என்ற பாபு தலைமையில் ஒரு கும்பல் நேற்று முன்தினம் சுரேஷ், பிரதீப் இருவரையும் அற்புதம் நகர், கலங்கல் தெருவில் வழிமறித்து நடுரோட்டில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொலையில் தொடர்புடைய தாக கருதப்படும் பூபாலன், ஜெயபாபு, மணிகண்டன், அன்பழகன் ஆகிய 4 பேரை திருவள்ளூர் அருகே தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியான காக்கா முட்டை என்ற பாபு உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in