டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி: கோவையை சேர்ந்த 2 பேர் கைது

டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி: கோவையை சேர்ந்த 2 பேர் கைது
Updated on: 
1 min read

சிவகங்கை: காரைக்குடியில் முதியவரை டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி ரூ.46.50 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த இருவரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவரின் செல்போனில் பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் பேசுவதாகக் கூறி சிலர் தொடர்பு கொண்டனர். அவரது ஆதார் அட்டையை தவறான செயல்களில் பயன்படுத்தியதால் அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி மிரட்டினர். பின்னர் பணம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை நம்பிய அந்த முதியவர், தன்னைத் தொடர்பு கொண்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.46.50 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த முதியவர், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணை அடிப்படையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹிதேஷ் சஞ்ஷெட்டி (33) சையத் ரஹ்மான் (44) ஆகிய இருவரை கைது செய்தனர்.

டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி: கோவையை சேர்ந்த 2 பேர் கைது
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in