இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது

இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

திரு​வள்​ளூர்/ஆவடி: ஆந்​தி​ரா​வில் இருந்து தமிழகத்​துக்கு கார் மற்​றும் மினி லாரி​யில் கடத்தி வரப்​பட்ட 27 கிலோ கஞ்சாவை நேற்று முன் தினம் போலீ​ஸார் பறி​முதல் செய்து 5 இளைஞர்​களை கைது செய் துள்​ளனர்.

திரு​வள்​ளூர் எஸ்​.பி. விவே​கானந்த சுக்லா உத்​தர​வின் பேரில் திரு​வள்​ளூர் டிஎஸ்பி தமிழரசி தலை​மை​யில் மப்​பேடு போலீ​ஸார் நேற்று முன்​தினம் கண்​ணூர் பகு​தி​யில் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, வந்த காரை நிறுத்தி போலீ​ஸார் சோதனை செய்​த​போது சுமார் 6 கிலோ கஞ்சா இருந்​ததும், அதை ஆந்​தி​ரா​வில் இருந்​து, வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாதேஷ்(24), டோனி கவுதம் (23), அஜித்​கு​மார் (29) ஆகிய 3 பேர் கடத்தி வந்​ததும் தெரிய வந்​தது.

அவர்​களிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பின்​னால் வந்த மினி லாரியை​யும் சோதனை செய்​தனர். அதில், முந்​திரி கழிவு மூட்​டைகளின் அடி​யில் 21 கிலோ கஞ்சாவை வேலூர் மாவட்​டத்தை சேர்ந்த அருண் பாண்​டியன்​(26), லோகேஷ்(29) ஆகியோர் கடத்தி வந்​தது தெரிய வந்​தது.

விசா​ரணை​யில், மாதேஷ் உள்​ளிட்ட 5 பேர், ஒடிசா மாநிலத்​தில் இருந்​து, ரயில் மூல​மாக ஆந்​தி​ரா​வுக்கு கஞ்சாவை கடத்தி வந்​து, அங்​கிருந்து கார் மற்​றும் மினி லாரி​யில் கஞ்சாவை கடத்தி வந்​தது தெரிய வந்​தது.

அவர்​களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா, மினி லாரி, கார், 5 செல்​போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

17 கிலோ பறி​முதல்

சென்​னை, அம்​பத்​தூர்- ஒரகடம் பகு​தி​யில் நேற்று காலை அம்​பத்​தூர் போலீ​ஸார் தீவிர ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அங்கு சுற்​றித் திரிந்த, ஆவடி சிந்து நகரைச் சேர்ந்த மகேஷ் (23), பட்​டாபி​ராம் - அண்ணா நகரைச் சேர்ந்த அஜய் குமார் (19) ஆகியோரின் கைப்​பைகளை போலீ​ஸார் சோதனை செய்​தபோது 10 கிலோ கஞ்சா இருந்​தது தெரிய வந்​த​து.

அவர்களிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், திருப்​ப​தி​யில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய​வந்​தது. அதே போல அம்​பத்​தூர்- சண்​முகபுரம் புழல் ஏரிக்​கரை பகு​தி​யில் நேற்று போலீ​ஸார் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டபோது, தூத்​துக்​குடி மாவட்​டத்​தைச் சேர்ந்த நரசிம்​மனை(29) போலீ​ஸார் சோதனை செய்​த​தில், ஆந்​திர மாநிலத்​தில் இருந்​து, 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்​து விற்​பனை செய்ய முயன்​றது தெரிய வந்​தது. மகேஷ், அஜய்​கு​மார், நரசிம்​ மனை கைது செய்​து, 17 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்தனர்.

இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது
​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in