தாம்பரத்தில் 4.9 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது

தாம்பரத்தில் 4.9 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது
Updated on
1 min read

தாம்பரம்: மேற்​குத் தாம்​பரம் திரு​வள்​ளுவர் 3-வது தெரு​வின் பின்​புறம் தாம்​பரம் காவல் நிலைய போலீ​ஸார் ரோந்து சென்​ற​போது சந்​தேகத்​துக்​கிட​மாக இருந்த தாம்​பரம் கடப்​பேரியை சேர்ந்த சந்​துரு (25), பழைய பெருங்​களத்​தூரைச் சேர்ந்த விஜய் (28) ஆகியோரைப் பிடித்து சோதனை செய்​தனர்.

அவர்​களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் கஞ்சா, 6 போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பின்னர் இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர். இதே​போல், கிழக்கு தாம்​பரம் ரயில்வே மைதானம் அருகே சேலை​யூர் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

அங்கு பிஹார் மாநிலம் முசாபர்​பூரைச் சேர்ந்த ஹரிசங்​கர் (28) என்​பவரை கைது செய்த போலீ​ஸார், அவருடன் இருந்த 17 வயது சிறு​வனை​யும் பிடித்​தனர். அவர்​களிட​மிருந்து 2 கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. இவர்​கள் ஆந்​திராவிலிருந்து கஞ்​சாவை கடத்தி வந்து இங்கு விற்​பனை செய்​த​தாக போலீஸார் தெரிவித்தனர்.

தாம்பரத்தில் 4.9 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது
காஞ்சியில் கடந்த 23 நாட்களில் 103 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in