நாகை அருகே 137 கிலோ போதைப் பொருள் பிடிபட்ட விவகாரம்: கைதான 4 பேருக்கும் 30-ம் தேதி வரை காவல்

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விளக்கம்
பறிமுதல் செய்யப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்.

பறிமுதல் செய்யப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்.

Updated on: 
1 min read

நாகப்பட்டினம்: நாகை அருகே 137 கிலோ கிரிஸ்​டல் மெத்​தம்​பெட்​டமைன் பறி​முதல் செய்​யப்​பட்​டது​தொடர்​பாக கைதான 4 பேர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி அருகே பிரதாபராமபுரத்​தில் ரூ.135 கோடி மதிப்​பிலான மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருளை மத்​திய வரு​வாய் புலனாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அக்.16-ம் தேதி பறி​முதல் செய்​தனர்.

இந்த வழக்​கில், தவெக மாவட்​டச் செயற்​குழு உறுப்​பின​ராக இருந்​தவரும், வழக்​கறிஞரு​மான பூபாலன்(42), சுகன்(27), மணிகண்​டன்(39), சதீஷ்குமார்(30) ஆகிய 4 பேரை கைது செய்​தனர். அவர்​களை நாகை சுங்​கத் துறை அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று மத்​திய வரு​வாய் புலனாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் தொடர்ந்து 30 மணி நேரம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு 8 மணி​யளவில் சுங்​கத் துறை​யினரின் விசா​ரணை நிறைவு பெற்​றது. இதையடுத்து, கைது செய்​யப்​பட்ட பூபாலன் உள்​ளிட்ட 4 பேரும் வேதா​ரண்​யத்​தில் உள்ள குற்​றவியல் நடுவர் நீதி​மன்ற நீதிபதி சுதாவின் வீட்​டில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். அவர்​களை அக்.30-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்து, 4 பேரும் நாகை கொண்​டுவரப்​பட்டு மாவட்ட சிறைச் சாலை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இது​குறித்து மத்​திய வரு​வாய் புலனாய்வு இயக்​குநரகம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்ட கடலோரக் கிராமத்​தில் இருந்து தடைசெய்​யப்​பட்ட செயற்கை போதைப் பொருளான 137 கிலோ கிரிஸ்​டல் மெத்​தம்​பெட்​டமைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. வேளாங்​கண்ணி அருகே பிரதாபராமபுரத்​தில் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளி நிற பொட்​டலங்​கள் அடங்​கிய 6 பைகள் மீட்​கப்​பட்​டன. அந்த பொட்​டலங்​களில், உயர் தூய்மை கொண்ட மெத்​தம்​பெட்​டமைன் இருந்​தது.

இந்த போதைப் பொருள் நடுக்​கடலில் ஒரு படகில் இருந்து மற்​றொரு படகுக்கு மாற்​றப்​பட்டு, இலங்​கைக்கு கடத்​தப்​பட​விருந்​தது. பறி​முதல் செய்​யப்​பட்ட சட்​ட​விரோத போதைப் பொருள் சந்​தையின் மதிப்பு ரூ.100 கோடிக்​கும் அதி​க​மாக இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சமீப ஆண்​டுகளில் தமிழகக் கடலோரப் பகுதி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட மிகப்​பெரிய போதைப்​பொருள் பறி​முதல்​களில் இது​வும் ஒன்று.

இது​தொடர்​பாக 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த சோதனை​யில் ரொக்​கம் ரூ.10 லட்​சம், 2 நான்கு சக்​கர வாக​னங்​கள், ஒரு இருசக்​கர வாக​னம் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்து, பிடிபட்ட 4 பேரும் கைது செய்​யப்​பட்டு, நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த நட​வடிக்​கை​யின் மூலம் ஒரு போதைப் பொருள் கடத்​தல் வலை​ அமைப்பு வெற்​றிகர​மாகத் தகர்க்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு தெரி​விக்​கப்​பட்​டுள்ளது.

<div class="paragraphs"><p>பறிமுதல் செய்யப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்.</p></div>
சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in