போதையில் குப்பை தொட்டியை எட்டி உதைத்ததால் தகராறு: அமமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

போதையில் குப்பை தொட்டியை எட்டி உதைத்ததால் தகராறு: அமமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: அமமுக பிர​முகர் வீட்​டில் பெட்​ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். வியாசர்​பாடி, இந்​தி​ரா​காந்தி நகர் மெயின் தெரு​வில் வசிப்​பவர் பால​முரு​கன் (47).

அமமுக நிர்​வாகி. இவர் எண்​ணெய் வியா​பாரம் செய்து வரு​வதோடு, அத்தோ கடை​யும் நடத்தி வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு அத்தோ கடையை மூடி​விட்டு வீட்​டுக்கு வந்​துள்​ளார்.

அப்​போது, அந்த வழி​யாக வந்த போதை கும்​பல் ஒன்று ஹெல்​மெட்​டால் சாலை​யோரம் நின்​றிருந்த வாக​னங்​களை சேதப்​படுத்​தி​ய​வாறும், கூச்​சலிட்​ட​வாறும் சென்​றுள்​ளது. மேலும், பால​முரு​கன் வீட்​டின் முன் வைக்​கப்​பட்​டிருந்த குப்பை தொட்​டியை எட்டி உதைத்​துள்​ளது.

இதை அவரது குடும்​பத்​தினர் தட்​டிக் கேட்​டுள்​ளனர்.இதனால் தகராறு ஏற்​பட்​டுள்​ளது. பின்​னர் அந்த கும்​பல் அங்​கிருந்து சென்​று​விட்​டது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 3.35 மணி​யள​வில் இருசக்கர வாக​னங்​களில் வந்த அதே கும்​பல் அடுத்​தடுத்து பால​முரு​கன் வீட்டு வளாகத்​துக்​குள் பெட்​ரோல் குண்​டு​களை வீசி​விட்டு தப்​பியது.

பெட்​ரோல் குண்​டு​கள் வீட்​டின் முன்​பும், முதல் மாடி​யின் பால்​கனி மீதும் விழுந்து தீப்​பற்றி எரிந்​தது. கண் விழித்து எழுந்த பால​முரு​கன், உடனடி​யாக தீயை அணைத்து விட்டு போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தார்.

இதையடுத்து, எம்​கேபி நகர் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்​றி விசா​ரித்​தனர்.

இதில் பெட்​ரோல் குண்​டு​களை வீசி​ய​தாக தனுஷ்​ராஜ், மோனிஷ்​ராஜ், ஸ்டீபன், சந்​தோஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்​தனர். இவர்​கள் எந்த பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள், இவர்​களின் பின்​னணி என்ன என்​பது குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

போதையில் குப்பை தொட்டியை எட்டி உதைத்ததால் தகராறு: அமமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in