சென்னை: போலி ‘பிஐஎஸ்’ முத்திரையுடன் விற்ற 300 மொபைல் பேட்டரி பறிமுதல்

சென்னை: போலி ‘பிஐஎஸ்’ முத்திரையுடன் விற்ற 300 மொபைல் பேட்டரி பறிமுதல்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை வேளச்​சேரி​யில் உள்ள மொபைல் ஹார்டுவேர் விற்​பனை நிலை​யத்​தில் இந்​திய தர நிர்​ணய கழக (BIS) அதி​காரி​கள் நடத்​திய திடீர் சோதனை​யில், 300-க்​கும் மேற்பட்ட போலி மொபைல் பேட்​டரி​கள் பறி​முதல் செய்யப்பட்டன.

வேளச்​சேரி​யில் உள்ள ஒரு கடை​யில் பிஐஎஸ் தரநிலை முத்​திரை தவறாகப் பயன்​படுத்​தப்​படுவ​தாக அதி​காரி​களுக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதன்​பேரில், கடந்த 22-ம் தேதி பிஐஎஸ் அதிகாரி​கள் அங்கு சென்று சோதனை நடத்​தினர். அப்​போது லித்தி​யம்-பாலிமர் மற்​றும் லித்​தி​யம்-அயன் பேட்​டரி​களில் அச்சிடப்​பட்​டிருந்த பிஐஎஸ் பதிவு எண்​கள் போலியானவை என்பது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.

அந்த எண்​கள் வேறு பிராண்​டுகளுக்கு வழங்​கப்​பட்​டவை அல்​லது செல்​லுபடி​யாகாதவை எனத் தெரிந்​ததை அடுத்து, சுமார் 300 பேட்டரி​களை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

இது​குறித்து பிஐஎஸ் சென்னை கிளை​யின் மூத்த இயக்​குநர் எஸ்.டி.தயானந்த் கூறுகை​யில், “மின்​னணுப் பொருட்​களை வாங்கும்​போது, வெறும் முத்​திரையை மட்​டும் நம்​பாமல், அது உண்​மையானது ​தானா என்​பதை ‘பிஐஎஸ் கேர்’ செயலி மூலம் நுகர்​வோர் சரிபார்த்து வாங்க வேண்​டும். தரக்​கட்​டுப்​பாட்டு விதிகளை மீறு​வோர் மீது கடும் நட​வடிக்கை தொடரும்" என்றார்.

சென்னை: போலி ‘பிஐஎஸ்’ முத்திரையுடன் விற்ற 300 மொபைல் பேட்டரி பறிமுதல்
சென்னை, பாடியில் குழந்தையில்லாத விரக்தியில் சோக முடிவு: மனைவியை கொன்று கணவன் தற்கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in