திருவள்ளூர் | அதிமுக கிளை செயலருக்கு அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் | அதிமுக கிளை செயலருக்கு அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்​ட​மாபுரம் தெரு​வைச் சேர்ந்​தவர் ஆரோன்​பாஷா (52). அதி​முக கிளை செய​லா​ள​ரான இவர் திரு​வள்​ளூர் அருகே உள்ள ஈக்​காடு பகு​தி​யில் பழைய கதவு​கள், ஜன்​னல் போன்ற பொருட்​களை விற்​பனை செய்​யும் தொழில் செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், ஆரோன் ​பாஷா நேற்று முன் தினம் பகலில் ஈக்​காடு பகு​தி​யில் உள்ள கடை​யில் இருந்​த​போது, அவரை மொபைல் போனில் அழைத்த மர்ம நபர், `பழைய பொருட்​கள் வேண்​டும்’ என, தெரி​வித்​துள்​ளார்.

தொடர்ந்​து, கடைக்கு வந்த மர்ம நபர்​கள், பொருட்​களை பார்ப்​பது போல் ஆரோன்​பாஷாவை கடைக்​குள் அழைத்​துச் சென்​று, பொருட்​களின் விலை குறித்து விசா​ரித்​த​தாக கூறப்​படு​கிறது.

அப்​போது, மர்ம நபர்​கள் மறைத்து வைத்​திருந்த அரி​வாளை எடுத்​து, ஆரோன்​பாஷாவை வெட்​டி​விட்டு அங்​கிருந்து தப்​பியோடினர். ஆரோன்​பாஷா​ ராமாபுரம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு, தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்.

வீடு​களை இடித்து அதிலிருந்து ஜன்​னல், கதவு​கள் போன்ற பொருட்​களை எடுத்து விற்​பனை செய்​வ​தில் ஆரோன்​பாஷாவுக்​கும் திரு​வள்​ளூரை அடுத்த தண்​ணீர்​குளம் பகு​தியை சேர்ந்த அரவிந்​தன் என்​பவருக்​கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்​ததும், அதன் காரண​மாக ஆரோன்​பாஷா அரி​வாளால் வெட்​டப்​பட்​டதும் புல்​லரம்​பாக்​கம் போலீஸார் விசா​ரணை​யில் தெரிய வந்​தது.

இதையடுத்​து, ஆரோன் ​பாஷாவை அரி​வாளால் வெட்​டியது தொடர்​பாக தண்​ணீர்​குளம் பகு​தி​யைச் சேர்ந்த அரவிந்​தன் (26), விஜய் (30), சூரிய பிர​காஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் | அதிமுக கிளை செயலருக்கு அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது
பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய அரசுக்கு போராட்ட குழு கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in