பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய அரசுக்கு போராட்ட குழு கோரிக்கை

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய அரசுக்கு போராட்ட குழு கோரிக்கை
Updated on
1 min read

காஞ்​சிபுரம்: தமிழக வெற்​றிக் கழகத்​தின் வெற்​றி, பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​தில் ஒரு பெரும் திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எப்​போது தங்​கள் நிலம், வீடு​கள் பிடுங்​கப்​படுமோ என்று பெரும் அச்​சத்​தில் இருந்த பொது​மக்​கள், தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு நிம்​ம​திப் பெரு​மூச்சு விட்​டாலும், இந்​தத் திட்​டத்தை நிறுத்தி வைக்​காமல் முழு​மை​யாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் மற்​றும் சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களைச் சேர்த்து 4,791 ஏக்​கர் பரப்​பள​வில் பசுமை வழி விமான நிலை​யம் அமைக்​கப்​படும் என்று மத்​திய, மாநில அரசுகள் அறி​வித்​தன.

இந்​தத் திட்​டத்​தால் 13 கிராமங்​களில் விவ​சாய நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டாலும், ஏகனாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முற்​றி​லும் அழி​யும் நிலை உரு​வான​தால் போராட்​டம் தீவிர​மானது. சுமார் இரண்டு ஆண்​டு​களாக இந்​தப் பகுதி மக்​கள் இத்​திட்​டத்​துக்கு எதி​ராகப் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வந்​தனர்.

இதற்​கிடை​யில், இந்​தப் பகு​தி​யில் பரந்​தூர் விமான நிலை​யம் அறிவிக்​கப்​பட்​டதும் ரியல் எஸ்​டேட் வர்த்​தகம் அசுர வளர்ச்சி கண்​டது. நிலங்​களின் மதிப்பு 10 மடங்கு வரை உயர்ந்​தது.

பல ரியல் எஸ்​டேட் உரிமை​யாளர்​களும், பணக்​காரர்​களும் நிலங்​களை வாங்கி குவித்​தனர். தற்​போது இத்​திட்​டத்தை தீவிர​மாக எதிர்த்து வந்த த.வெ.க தலை​வர் விஜய் வெற்றி பெற்று முதல்​வ​ரான​தால், இந்​தத் திட்​டம் ரத்து செய்​யப்​படலாம் என்ற அச்​சம் (முதலீட்​டாளர்​கள் மத்​தி​யில்) உரு​வாகி​யுள்​ளது.

இந்த விமான நிலை​யம் அறிவிக்​கப்​பட்​டது முதல், ஆரம்​பத்​தில் இருந்தே இத்​திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் விஜய், விக்​கிர​வாண்​டி​யில் நடை​பெற்ற தங்​கள் கட்சி மாநாட்​டில் இத்​திட்​டத்தை எதிர்த்து தீர்​மானம் நிறைவேற்​றியதோடு, விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக தனது முதல் போராட்​டத்தை பரந்​தூர் அரு​கிலேயே நடத்​தி​னார்.

இதனால் இந்​தத் திட்​டம் இனி வேகம் எடுக்​கு​மா? அல்​லது கிடப்​பில் போடப்​படு​மா? என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது. இது குறித்து போராட்​டக் குழு ஒருங்​கிணைப்​பாளர் ஆர்​.எல்​.இளங்கோ கூறும்​போது, “வி​மான நிலைய ஓடு​தளம் அமைய​வுள்ள பகுதி நீர்​நிலைகளை உள்​ளடக்​கியது.

த.வெ.க தலை​வர் விஜய் முதல்​வ​ராகி​யுள்​ள​தால் இத்​திட்​டத்தை எளி​தாக ரத்து செய்ய முடி​யும். இந்​தத் திட்​டத்தை நிறுத்தி வைப்​பது போன்ற நடவடிக்​கையை எடுக்​காமல் முழு​மை​யாக ரத்து செய்ய வேண்​டும் என்றே நாங்​கள் விரும்​பு​கிறோம்.

விவ​சா​யிகளுக்கு பாதிப்​பில்​லாத வேறு மாற்று இடங்​களில் இந்​தத் திட்​டத்தை அமல்​படுத்த நடவடிக்கை எடுக்​கலாம். பரந்​தூர் பகு​தி​யில் விமான நிலை​யம் அமைந்​தால், இங்கு நீர்​நிலைகளில் தேங்க வேண்​டிய உபரிநீர் அனைத்​தும் சென்​னைக்​குள்​தான் செல்​லும்.

எனவே, இத்​திட்​டத்தை ரத்து செய்​வது சென்னை மக்​களுக்​கும், விஜய்க்கு முழு​மை​யாக ஆதர​வளித்த சென்னை வாக்​காளர்​களுக்​கும்​ கூட மகிழ்ச்​சி​யான செய்​தி​யாக இருக்கும்” என்றார்.

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய அரசுக்கு போராட்ட குழு கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in