ஆன்லைன் முதலீட்டு வர்த்தக மோசடி: கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் திருச்சியில் கைது

ஆன்லைன் முதலீட்டு வர்த்தக மோசடி: கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் திருச்சியில் கைது
Updated on
1 min read

சென்னை: ஆன்​லைன் முதலீட்டு வர்த்​தகம் என்ற பெயரில் மோசடி செய்​யப்​பட்ட ரூ.1.17 கோடி உத்​தரப் பிரதேசம், ஹரி​யா​னா, கர்​நாடகா மாநிலங்​களுக்கு மாற்​றப்​பட்ட விவ​காரத்​தில் கல்​லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோகரன் (58). இவர் சமூக வலைதள விளம்​பரங்​களை பார்த்து அதிக லாபம் ஈட்​டும் ஆசை​யில், மோசடி நபர்​கள் அறி​வுறுத்​தலின்​படி ஆன்​லைன் வர்த்​தகத்​தில் முதலீடு செய்​துள்​ளார்.

பின்​னர் அவர்​களின் தொடர் ஆலோ​சனைப்​படி பங்​குச் சந்​தை​யிலும் முதலீடு செய்​துள்​ளார். இவ்வாறு ரூ.1.17 கோடி செலுத்தி​யுள்​ளார். ஆனால் அவருக்கு லாபம் மட்​டும் அல்​லாமல் முதலீடு செய்த பணம் கூட கிடைக்​க​வில்​லை.

வேதனையடைந்த அவர் இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் மனோகரனிடம் மோசடி செய்​யப்​பட்ட பணம் உத்​தரப் பிரதேசம், ஹரி​யா​னா, கர்​நாடகா மாநிலங்​களில் உள்ள வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து அந்த வங்​கிக் கணக்​கு​களில் இருந்து கும்​பகோணம், தஞ்​சாவூர் வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டு, ஏடிஎம் மூலம் குறிப்​பிட்ட பணம் எடுக்​கப்​பட்டு கிரிப்டோ கரன்​சி​யாக மாற்​றப்​பட்டு முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதில் தொடர்​புடைய திருச்​சி​யைச் சேர்ந்த பிர​வீன் (20), அதே மாவட்​டத்​தைச் சேர்ந்த சித்​திக் பாஷா (26), பினோஜ் கான் (32) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

விசா​ரணை​யில் பிர​வீன் கல்​லூரி மாணவர் என்​பதும் இவர் தனது வங்​கிக் கணக்கை கமிஷனுக்​காக சைபர் மோசடி கும்​பலிடம் வழங்​கி​யுள்​ளார் என்​பதும், சித்​திக் பாஷா ஆட்டோ ஓட்​டுநர் வேலை செய்​து​வரு​வதும், இவர் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றத்​துக்​காகப் பல

போலி வங்​கிக் கணக்​கு​களைச் சேகரிப்​ப​தில் ஈடு​பட்​டுள்​ளார் என்​பதும், பினோஜ் கான் ஆன்​லைன் வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​வதும், மோசடிப் பணத்தை கிரிப்டோ கரன்​சி​யாக மாற்றி மோசடி மூலம் பணம் சம்​பா​தித்து வந்​ததும் தெரிய​வந்​தது.

அவர்​களிட​மிருந்து குற்ற நடவடிக்​கைகளுக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட 3 செல்​போன்​கள், 1 லேப்​டாப், 1 டேப் மற்​றும் வழக்கு ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

ஆன்லைன் முதலீட்டு வர்த்தக மோசடி: கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் திருச்சியில் கைது
பழிக்குப் பழியாக நடந்த கொலை: சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் 7 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in