

குன்னூர்: வெலிங்டன் ராணுவக் கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கடந்த 3-ம் தேதி எழுத்தர், தொழில் நுட்பம் உள்பட 10 பிரிவுகளுக்கான தேர்வு நடந்தது. தேர்வு அறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், உத்தரப்பிரதேசமாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்ற இளைஞர் அதே முகத் தோற்றம் கொண்ட வேறு ஒருவருக்காக வந்து, ஆள்மாறாட்டம் செய்தது ‘பயோமெட்ரிக்’ சோதனையில் உறுதியானது.
இதேபோல், ஆக்ராவைச் சேர்ந்த மோஹர் சிங், ரோகிதாஸ் ஆகியோர் இடம் மாறி அமர்ந்து தேர்வு எழுதியதும், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகள், வெலிங்டன் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.