கரூர் அருகே தாயின் அஸ்தியை கரைக்க சென்ற 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு

கரூர் அருகே தாயின் அஸ்தியை கரைக்க சென்ற 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு
Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே தாயின் அஸ்​தியை கரைக்​கச் சென்​ற​போது காவிரி ஆற்​றில் தேங்​கி​யிருந்த நீரில் மூழ்க்கி சகோ​தரர்​கள் உள்​ளிட்ட 3 பேர் உயி​ரிழந்​தனர்.

கரூர் நரசிம்​மபுரத்​தைச் சேர்ந்​தவர் குப்​பு​சாமி​யின் மனைவி தேவகி. இவரது மகன்​கள் சுரேஷ் (65), அருணன் (60). இரு​வரும் ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியர்​கள். வயது மூப்பு காரண​மாக தேவகி அண்​மை​யில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது அஸ்​தியை காவிரி ஆற்​றில் கரைப்​ப​தற்​காக மகன்​கள் சுரேஷ், அருணன் ஆகியோர் உறவினர்​களு​டன் நேற்று நெரூர் காவிரி ஆற்​றுக்​குச் சென்​றனர்.

அஸ்​தியைகரைத்துவிட்​டு சுரேஷ், அருணன், உறவினர் சீனிவாசன் (64) உள்​ளிட்ட 7 பேர் ஆற்​றில் குளித்​துள்​ளனர். அப்​போது, மூவரும் எதிர்​பா​ராத​வித​மாக நீரில் மூழ்​கினர். இதைப் பார்த்த மற்​றவர்​கள் கூச்​சலிட​வே, அரு​கில் இருந்​தவர்​கள் 3 பேரை​யும் மீட்டு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், அவர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து வாங்​கல் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, உயி​ரிழந்த 3 பேரின் உடல்​களையும் கரூர் அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்​து விசாரித்து வருகின்றனர்.

கரூர் அருகே தாயின் அஸ்தியை கரைக்க சென்ற 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு
“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in