சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை: சென்​னையி​லிருந்து தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு ஆம்னி பேருந்து புறப்​பட்டு வந்​தது. அதே​போல, சென்​னையி​லிருந்து நாகர்​கோ​விலுக்கு ஒரு ஆம்னி பேருந்து மதுரை நோக்கி சென்​று​கொண்​டிருந்​தது.

இந்​தப் பேருந்​துகள் ஒன்​றன்​பின் ஒன்​றாக வந்த நிலை​யில், நேற்று அதி​காலை சாத்​தான்​குளம் சென்ற ஆம்னி பேருந்​தில் ஓட்​டுநரை மாற்​று​வதற்​காக, கொட்​டாம்​பட்டி அருகே பள்​ளப்​பட்டி பகு​தி​யில் சாலை​யோர​மாக நிறுத்​தப்​பட்​டது.

அப்​போது, பின்​னால் வந்​து​கொண்​டிருந்த நாகர்​கோ​வில் ஆம்னி பேருந்​து, எதிர்​பா​ராத​வித​மாக ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்​து, சாலை​யோர​மாக நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதி, பின்​னர் அரு​கில் இருந்த மின் கம்​பத்​தி​லும் இடித்து விபத்​துக்​குள்​ளானது.

இதில், நின்​றிருந்த ஆம்னி பேருந்​தின் பின் இருக்​கை​யில் அமர்ந்​திருந்த செங்​கல்​பட்டு சுதர்​சன் (29), குமரி மாவட்​டம் மார்த்​தாண்​டம் மேரி சுஜா (45) மற்​றும் விபத்து ஏற்​படுத்​திய பேருந்​தில் பயணித்த கோவில்​பட்டி கனகரஞ்​சிதம் (65) ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

மேலும், 15-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். தகவலறிந்து வந்த மேலூர் டிஎஸ்பி சிவக்​கு​மார் தலை​மையி​லான போலீ​ஸார், உயி​ரிழந்​தோரின் உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக மேலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், காயமடைந்​தவர்​களும் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
ராமேசுவரம்: போதைப் பொருள் கடத்திய 11 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in