ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: சினிமா உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: சினிமா உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ஜனநாயகன் திரைப்​படம் இணை​யதளங்​களில் சட்ட விரோத​மாக வெளி​யாகக் காரண​மாக இருந்​த​தாக சினிமா உதவி எடிட்​டர் உள்​ளிட்ட மேலும் 3 பேரை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் உரு​வான திரைப்​படம் ஜனநாயகன்.

விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், அவரது ரசிகர்​கள் மத்​தி​யில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நில​வியது.

கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு வெளி​யாக வேண்​டிய இப்​படம், தணிக்கை சிக்​கல்​களால் தள்​ளிப்​போனது.

நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்​கைக் குழு படத்தை ஆய்வு செய்​தது. விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் பெற்று படம் திரையரங்​கு​களில் வெளி​யாகும் என ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்த நிலை​யில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப்​ப​திப்​பும் இணை​யதளங்​களில் சட்ட விரோத​மாகக் கசிந்​தது.

இது படக்​குழு​வினர் மட்​டுமின்​றி, சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக டிஜிபி அலு​வல​கத்​தில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில், மாநில சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

முதல்​கட்​ட​மாக படம் வெளி​யான அனைத்து இணை​யதள முகவரி​களை​யும் கண்​டறிந்​து, அவற்றை சைபர் க்ரைம் போலீ​ஸார் முடக்​கினர். மேலும் படங்​களை நண்​பர்​களுக்கு பகிர்ந்த 6 பேரை அடுத்​தடுத்து கைது செய்​தனர்.

மேலும் திரைப்​படம் கசிய மூளை​யாகச் செயல்​பட்​டது யார் என தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்​படத்​துக்​கான எடிட்​டிங் ஸ்டூடியோ​வில் உதவி எடிட்​ட​ராக பணிபுரிந்​தவர் கைது செய்​யப்​பட்​டார்.

இவர்​தான் திரைப்​படத்​தின் ரீல்​களை திருடிச்​சென்று அதை இணை​யதளத்​தில் கசி​ய​விட்​டுள்​ளார். இவருக்கு உதவி​யாக இருந்த மேலும் 2 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவர்​கள் 3 பேரும் சென்​னையைச் சேர்ந்​தவர்​கள். இவர்​கள் பணத்​துக்​காக இது​போன்ற செயலில் ஈடு​பட்​​டார்​களா? அல்​லது வேறு ஏதேனும்​ பின்​னணி உள்​ள​தா? என சைபர்​ க்​ரைம்​ போலீஸார்​ தொடர்​ந்​து வி​சாரிக்​கின்​றனர்​.

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: சினிமா உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
காதல் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in