சென்னையில் 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது

சென்னையில் 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது
Updated on: 
1 min read

சென்னை: புனித தோமையர் மலை காவல் மாவட்​டம் ஆதம்​பாக்​கத்தில் கடந்த 17-ம் தேதி போலீ​ஸார் அதிரடி தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். ஈகிள் ஷோரூம், தில்லை கங்கா நகர் காவல் உதவி மையம், இ.பி. காலனி காவல் உதவி மையம் உள்​ளிட்ட பகு​தி​களில் போலீ​ஸார் தீவிர சோதனை நடத்​தினர்.

இதில் 390 வாக​னங்​களை போலீ​ஸார் தணிக்கை செய்​தனர். சந்​தேகத்​திற்​குரிய 32 வாக​னங்​களை நிறுத்தி விசா​ரணை மேற்​கொண்​டனர். மேலும், 35 சந்​தேக நபர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​ட​தில், 21 பேரிடம் உரிய விசா​ரணை, அடை​யாள சரி​பார்ப்பு மேற்​கொள்​ளப்​பட்டு எச்​சரிக்கை செய்து அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதற்​கிடையே, பல்​வேறு குற்ற வழக்​கு​களில் சிக்கி தலைமறை​வாக இருந்த ஆதம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சூர்யா என்ற குருவி சூர்யா (27), அஜய் (27), விக்​னேஷ் (19) ஆகிய 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதில், கைது செய்​யப்​பட்ட சூர்யா என்ற குருவி சூர்​யா, ஆதம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தின் சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி என்​பதும், அவர் மீது ஏற்​கெனவே 43 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பதும் போலீ​ஸாரின் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. கைது செய்​யப்​பட்ட 3 பேரும் கடந்த 17-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

சென்னையில் 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் ஜவுளி ஏற்றுமதிக்கு புதிய சந்தை உருவாகும்: வெளிநாட்டு வர்த்தக உயரதிகாரி தகவல்

X