அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி: புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் நைஜீரிய கும்பல் கைவரிசை

சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி: புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் நைஜீரிய கும்பல் கைவரிசை
Updated on: 
1 min read

சென்னை: புதுச்​சேரியைத் தொடர்ந்து தமிழக அரசின் வங்​கிக் கணக்​கிலும் ரூ.22 கோடி டிஜிட்​டல் மோசடி நடந்​துள்​ள​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது. இது​குறித்து சைபர் க்​ரைம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

புதுச்​சேரி கோரிமேட்​டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முது​நிலை பல் மருத்​து​வக் கல்​லூரி​யின் பேராசி​ரியர்​கள், மருத்​து​வர்​கள், ஊழியர்​கள் என 260 பேருக்கு தீபாவளியை முன்​னிட்டு 3 மாதத்​துக்​கான சம்​பளம் வழங்க ரூ.8.16 கோடி நிதி விடுவிக்​கப்​பட்டு அரசு கரு​வூலம் மூலம் கல்​லூரி​யின் வங்​கிக் கணக்​குக்கு கடந்த 3-ம் தேதிஇரவு வரவு வைக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், கல்​லூரி நிர்​வாக வங்​கிக் கணக்​கில் ஏற்​கெனவே இருந்த பணத்​துடன் சேர்த்து ரூ.8.85 கோடி திடீரென மாய​மானது. கரு​வூலத்​தில் இருந்து பணம் வரவு வைக்​கப்​பட்ட 2 மணி நேரத்​தில் இந்தபணம் டிஜிட்​டல் முறை​யில் திருடப்​பட்​டது. அம்​மாநில சைபர் க்​ரைம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், சென்னை, கோவை, திருப்​பூர் உள்​ளிட்ட பகுதி​களில் இருந்து மோசடி கும்​பல் செயல்​பட்​டது தெரிய​வந்​தது. வழக்​கில் தொடர்புடைய​வர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

இதேபோல, தமிழக ஊரக வளர்ச்​சித் துறை​யின்​கீழ் பராமரிக்​கப்​படும் வங்​கிக் கணக்​கு​களில் இருந்​தும் டிஜிட்​டல் முறை​யில் மோசடி செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளியாகி உள்​ளது. குறிப்​பாக, ராம​நாத​புரம் மாவட்​டம் மண்​டபம் ஊராட்சி ஒன்​றியத்​தில் ரூ.14 கோடி, நாகப்​பட்​டினம் ஊராட்சி ஒன்​றியத்​தில் ரூ.3.10 கோடி, திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் ஊராட்சி ஒன்​றியத்​தில் ரூ.5 கோடி என மொத்​தம் ரூ.22.10 கோடி அரசு நிதி மோசடி செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

இந்த நிதி, 15-வது நிதிக்​குழு மானியத்​தின் கீழ் ஊரகப் பகுதி​களில் சுகாதார நல மையங்​கள் கட்​டுவதற்​கான திட்​டத்​துடன் தொடர்​புடையது. தமிழகத்​தின் பல்​வேறு ஊராட்​சிகளி​லும் தலா ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் சுகாதார நல மையக் கட்​டிடங்​கள் அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​துக்​கான நிதி ஒதுக்​கீடு, பரிவர்த்​தனைகளைக் கண்​காணிக்க ஊரக வளர்ச்​சித் துறை​யில் மாநில அளவி​லான ஒற்றை மைய வங்​கிக் கணக்கு பராமரிக்​கப்​படு​கிறது.

மாவட்ட நிர்​வாகம் பணிகள் நிறைவு அறிக்​கையை அளித்த பிறகே சம்​பந்​தப்​பட்ட நிதி விடுவிக்​கப்​படும். அதை தொடர்ந்து, வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள் மூலம் ஒப்​பந்​ததா​ரர்​களுக்கு பணம் வழங்​கப்​படும் நடைமுறை பின்​பற்​றப்​படு​கிறது. சென்​னை​யில் இருந்து நிர்​வகிக்​கப்​படும் இந்த வங்​கிக் கணக்​கு​களில் இணைய வழி​யாக ஊடுருவி, பல்​வேறு பரிவர்த்​தனைகள் மூலம் பணம் மாற்​றப்​பட்​டுள்​ள​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

புதுச்​சேரி, தமிழகத்​தில் நடந்​துள்ள இந்த மோசடிகளின் பின்​னணி​யில் நைஜீரியாவைச் சேர்ந்த சைபர் க்​ரைம் கும்​பல்​களுக்​குத் தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இது​குறித்து தமிழக சைபர்க்ரைம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை​யில் இறங்கி உள்​ளனர்.

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி: புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் நைஜீரிய கும்பல் கைவரிசை
சென்னை அண்ணா நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: புத்தக கொள்முதல் முறைகேட்டால் அரசு நடவடிக்கை

X